மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

இந்தியாவில் இயற்கை எரிவாயு வர்த்தக மையம்!

இந்தியாவில் இயற்கை எரிவாயு வர்த்தக மையம்!

அக்டோபர் மாதத்துக்குள் இந்தியாவில் இயற்கை எரிவாயு வர்த்தக மையத்தை ஏற்படுத்தி எரிவாயு நுகர்வில் ஒரு எழுச்சியை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. எரிவாயு வர்த்தகம் மற்றும் பரிமாற்ற மையத்தை இயக்குவதற்கான செயல்திட்டத்தை உருவாக்க ஆலோசகர் ஒருவரை இணைத்துக்கொள்ள பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் முயற்சி செய்து வருகிறது.

ஆலோசகரைப் பணியமர்த்துவதற்கான டெண்டரில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம், “நாட்டில் இயற்கை எரிவாயு நுகர்வை வலுப்படுத்தும் வகையில், எரிவாயு விற்பனை மற்றும் பரிமாற்ற மையத்தை அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இயற்கை எரிவாயுவை விற்பனை செய்யவும், சந்தைக்கு விநியோகம் செய்யவும் இந்த மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த இயற்கை எரிவாயுவிற்குமான விலையை அரசே நிர்ணயிக்கிறது.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு எரிவாயு மிகுந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் விலை, ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு 3.06 டாலராக உள்ளது. இதோடு ஒப்பிடுகையில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் திரவ நைட்ரஜன் வாயுவின் விலையோ 7.5 டாலராக உள்ளது. ஆக, தற்போது நுகரப்படும் இயற்கை எரிவாயுவின் பங்கு 6 சதவிகிதமாக உள்ளது. இதை 2030ஆம் ஆண்டுக்குள் 15 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் தெரிவித்துள்ளது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon