மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மூன்று மாதங்களில் முடிவு செய்யுங்கள்!

பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மூன்று மாதங்களில் முடிவு செய்யுங்கள்!

பள்ளிகளில் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

குர்கான் பள்ளியில் கொல்லப்பட்ட ஏழு வயதான சிறுவன் பிரதியுமானின் தந்தை, பள்ளிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி மனு ஒன்றை அளித்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஏப்ரல் 17) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘நீதிமன்றம் பள்ளிகளுக்கான கொள்கை அல்லது வழிமுறைகளை வடிவமைப்பதில் நிபுணர் அல்ல. மனுக்களில் எழுதும் காரணங்களை அரசு கவனித்தால் அதுவே போதுமானது. இதுகுறித்து ஆராய்ந்து மூன்று மாதங்களுக்குள் பதிலளிக்க மனிதவள மேம்பட்டு அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசால் எடுக்கப்படும் முடிவு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டுக்கும் பொருந்தும்’ என்று தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாகப் பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த பிரதியுமான் என்ற ஏழு வயது சிறுவன் பள்ளிக் கழிப்பறையில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் பள்ளி பேருந்து ஓட்டுநர் அசோக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணையின்போது அதே பள்ளியை சேர்ந்த 16 வயது மாணவன் பிரதியுமானை கொலை செய்தது தெரியவந்தது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon