மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

பேராசிரியைக்கு 12 நாள்கள் காவல்!

பேராசிரியைக்கு 12 நாள்கள் காவல்!

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியை 12 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி நேற்று (ஏப்ரல் 17) உத்தரவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வரும் பி.நிர்மலா தேவி (48) மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த காரணத்துக்காக நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 370, 511 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்ட பிரிவு 67இன் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவரிடம் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலைய போலீஸார் நேற்று முன்தினம் இரவு முதல் விசாரணை நடத்தினர்.

விசாரணை நேற்று நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நிர்மலா தேவியை ஏப்ரல் 28ஆம் தேதி வரை 12 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, அவர் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னதாக , இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணை ஆணையத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon