மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 ஜூலை 2020

தினம் ஒரு சிந்தனை: சக்தி!

தினம் ஒரு சிந்தனை: சக்தி!

பாரதியார் (11 டிசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921). கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். அவரது எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையது. கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, தேசிய கீதங்கள், விடுதலைப் பாடல்கள், பாஞ்சாலி சபதம் போன்றவை இவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு; - தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்று உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon