மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஏப் 2018

தமிழ் சினிமா ஸ்டிரைக் வாபஸ்: யாருக்கு லாபம்?

தமிழ் சினிமா ஸ்டிரைக் வாபஸ்: யாருக்கு லாபம்?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 48

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் இன்றைய நிலையில் ஒரு படம் 50 நாள்களைக் கடப்பது கஷ்டம். அதேபோன்று தமிழ் சினிமா துறையில் கடந்த 48 நாள்களாக நீடித்துவந்த வேலைநிறுத்தமும் முடிவுக்கு வந்துள்ளது.

தமிழக அரசு ஏற்பாடு செய்த முத்தரப்புக் கூட்டம் நேற்று காலை 11.30 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், டிஜிட்டல் நிறுவனங்கள் ஆகியவற்றின் சார்பில் நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.சி.வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொடக்கத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் திருப்பூர் சுப்பிரமணியம் இரு தரப்பிலும் சுமுகமான முடிவுக்கு வரப் போராடினார்.

காலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திரையரங்க உரிமையாளர்கள் முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அரசாணை பிறப்பிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. திரையரங்கு பராமரிப்புக் கட்டணம் ஆந்திராவைப் போன்று குளிரூட்டப் பட்ட அரங்குகளுக்கு 5 ரூபாயும் சாதாரண தியேட்டர்களுக்கு 3 ரூபாயும் அனுமதிப்பதற்குத் தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அரசாங்கம் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. அதே போன்று தயாரிப்பாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் கொள்கை ரீதியாகத் திரையரங்க உரிமையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

டிக்கெட் விற்பனையைக் கணினி மயமாக்குவது, டிக்கெட் விற்பனை, வசூல் கணக்கில் வெளிப்படைத் தன்மை, இதற்கென்று தனி சர்வர் தமிழக அரசால் ஏற்படுத்தித் தரப்படும். ஆன்லைன் டிக்கெட் கட்டணத்தைக் குறைப்பது, படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதி... இவை அனைத்தும் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

VPF கட்டணம் தற்போதைய கட்டணத்திலிருந்து 50% குறைக்கப்பட்டிருக்கிறது. வழக்கம்போல முதலாளித்துவ அமைப்பில் 48 நாள்கள் நடைபெற்ற வேலைநிறுத்தம் பெரும் முதலாளிக்கு அதிக வருமானத்தைத் தரக்கூடியதாகவே தெரிகிறது. கொள்கை ரீதியாக அரசாங்கம் இரு தரப்புக் கோரிக்கைகளை அமல்படுத்த ஒப்புக்கொண்டாலும், எப்போது இது நடைமுறைக்கு வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை

வேலைநிறுத்தம் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை ஒற்றுமைப்படுத்தியிருக்கிறது. இருப்பினும் தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 15 ஆண்டுகளில் இப்படியோர் ஒற்றுமையைக் கண்டதில்லை. இதற்கு என்ன காரணம்? நேற்றைய பேச்சுவார்த்தையில் நடந்த காமெடி - கலாட்டாக்கள் என்ன?

இன்று பகல் 1 மணி அப்டேட்டில்...

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

புதன் 18 ஏப் 2018