மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

ஐடி துறையில் குறையும் அலுவலகங்கள்!

ஐடி துறையில் குறையும் அலுவலகங்கள்!

தகவல் தொழில்நுட்பம் (ஐடி) மற்றும் பிபிஎம் நிறுவனங்கள் அலுவலகங்களைக் குத்தகைக்கு எடுப்பது 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 37 சதவிகிதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதுகுறித்து சர்வதேச பிராபர்டி கன்சல்டன்ட் கஷ்மேன் & வேக்ஃபீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இந்தியாவின் முன்னணி எட்டு நகரங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிபிஎம் நிறுவனங்கள் அலுவலகங்களைக் குத்தகைக்கு எடுப்பது 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 37 சதவிகிதம் குறைந்துள்ளது. தற்போது இத்துறைகளில் நிலவும் நெருக்கடியான ஒரு சூழலில் புதிய ஊழியர்கள் வரத்து குறைந்ததும் இதற்கு ஒரு காரணமாகும். 2018 முதல் காலாண்டு கணக்குப்படி ஐடி மற்றும் பிபிஎம் நிறுவனங்களின் பரப்பு 2.7 மில்லியன் சதுர அடியாகக் குறைந்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய விசா கொள்கைகள், ஐடி துறையில் ஏற்பட்டுவரும் புதிய மாற்றங்கள், குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் போன்ற வளர்ச்சிகளை உள்வாங்கிக் கொள்வதில் உள்ள சிக்கல்களும் இதற்குக் காரணமாக உள்ளன. 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஐடி நிறுவனம் வாடகைக்கு எடுக்கும் பரப்பு தோராயமாக 35,000 சதுர அடியாக இருந்தது. ஆனால், 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதன் பரப்பளவு 23,000 சதுர அடியாகக் குறைந்துள்ளது. இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு நகரிலும் 36 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon