மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

இலக்கை நோக்கி கிராமப்புறச் சாலைத் திட்டம்!

இலக்கை நோக்கி கிராமப்புறச் சாலைத் திட்டம்!

கிராமப்புறச் சாலை அமைப்புத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இதுவரையில் 85.37 சதவிகித இலக்கு எட்டப்பட்டுள்ளதாக ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2000ஆவது ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதமர் கிராமப்புறச் சாலை அமைப்புத் திட்டத்தில் மொத்தம் 1,78,184 குடியிருப்புகளை 2019ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துக்குள் இணைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதில் தற்போது வரையில் சுமார் 1,52,124 குடியிருப்புகள் (85.37%) இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1,78,184 தகுதி வாய்ந்த குடியிருப்புகளின் இலக்கில் 1,66,012 குடியிருப்புகளுக்கு (93%) அனுமதி வழங்கப்பட்டு இதுவரையில் சுமார் 11,499 கிராமங்களில் புதிய இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2019 மார்ச் மாதத்துக்குள் மொத்தம் 19,725 கிராமங்களுக்கு 61,000 கிலோமீட்டர் தூரத்துக்குச் சாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கூறிய 1,52,124 குடியிருப்புகளுடன் சேர்த்து, கூடுதலாக 100 முதல் 249 மக்கள்தொகை கொண்ட 2,109 குடியிருப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரையில் 5,50,533 கிலோமீட்டர் தூரத்துக்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதம் நிறைவடைந்த 2017-18 நிதியாண்டில் தினசரி 134 கி.மீ வீதம் மொத்தம் 48750.66 கி.மீ அளவிலான சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய 2016-17 நிதியாண்டில் 47447.00 கி.மீ சாலையும், 2015-16இல் 36449.36 கி.மீ சாலையும் அமைக்கப்பட்டிருந்தன.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon