மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

வேலைவாய்ப்பு: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஐசிஎஸ்எஸ்ஆர்/மேஜர் ரிசர்ச் புராஜெக்ட்டில் ரிசர்ச் அசோசியேட் பணியை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: ரிசர்ச் அசோசியேட்

ஊதியம்: ரூ.16,000/-

பணிக் காலம்: 13 மாதங்கள்

கல்வித் தகுதி: எம்.ஏ/எம்.எஸ்சி., எம்.எட்., (குறைந்தபட்சம் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்) மற்றும் நெட் தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.பில்/பிஹெச்.டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை மதிப்பெண் சான்றுகளின் நகல்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுடன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

தேர்வு முறை: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

கடைசித் தேதி: 10.05.2018

மேலும் விவரங்களுக்கு அண்ணாமலை பல்கலை இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon