மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

லைட்டைத் திருப்பிய உதயநிதி

லைட்டைத் திருப்பிய உதயநிதி

காவிரிப் பிரச்சினை தொடங்கியதிலிருந்து அரசியல்களத்தில் படு பிசியாக இருந்த நடிகர் உதயநிதி ஸ்டாலின், தற்போது முடிவடைந்திருக்கும் தமிழ் சினிமா ஸ்டிரைக்கின் காரணமாக மீண்டும் திரையுலகத்தின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியிருக்கிறார். ஆனால், அதுவும் காவிரி தொடர்புடையது தான்.

ஐபிஎல் #IPL போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா..? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே... என்று ட்விட்டரில் பதிவு செய்ததன் மூலம் உதயநிதி தமிழ் சினிமாவின் ஸ்டிரைக் முடிவை வேறு பக்கத்துக்குத் திருப்பியிருக்கிறார்.

உதயநிதியின் ரசிகர்கள் மட்டுமின்றி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்கும் நெட்டிசன்கள், ஐபிஎல் போட்டிகள் சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டதால் மன உளைச்சலில் இருக்கும் ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் இதனை வலியுறுத்தியே பேசிவருகின்றனர்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon