மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

செல்போன் கட்டணம்: புதிய வசதி அறிமுகம்!

செல்போன் கட்டணம்: புதிய வசதி அறிமுகம்!

பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கான கட்டண விவரங்களை ஒரே தளத்தில் கொண்டுவருவதற்கான திட்டத்தை ட்ராய் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியத் தொலைத் தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) ஏப்ரல் 16ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக பீட்டா வெர்சன் போர்ட்டலை ட்ராய் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போர்ட்டல் மூலமாக, பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பல்வேறு விதமான சேவைகள் குறித்து அனைவரும் எளிதாக அறிந்துகொள்ள இயலும்.

இதுகுறித்து ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு நெட்வொர்க் நிறுவனங்களின் சேவை விவரங்கள் குறித்து அறிய டாரிஃப் போர்டல் சேவையை ட்ராய் அறிமுகப்படுத்தியுள்ளது. ட்ராய் இணையதளப் பக்கத்தில் இந்தச் சேவையும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தளம் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி பங்குதாரர்களுக்கும், கட்டண ஒப்பீடு குறித்த ஆய்வாளர்களுக்கும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்கட்டமாக இந்தத் திட்டம் டெல்லிக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் அவர்களுடைய கருத்தையும் இந்தத் தளத்தில் பதிவு செய்யலாம். இந்தத் தளம் தொடங்கப்பட்டு ஒரு நாளிலேயே நேற்று முடங்கியுள்ளது. அதிகப்படியானோர் சென்று பார்த்ததால் முடங்கியிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon