மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

முடங்கிய ட்விட்டர்!

முடங்கிய ட்விட்டர்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ட்விட்டர் சமூக வலைதளம் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் முடங்கி பின்னர் மீண்டும் இயங்கத் தொடங்கியது.

உலக அளவில் பேஸ்புக்குக்கு அடுத்தபடியாக அதிக பயனர்களைக் கொண்டுள்ள சமூக வலைதளம் ட்விட்டர். இது கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்து வந்த நிலையில், நேற்று இந்திய நேரப்படி இரவு 7.35 மணிக்கு திடீரென முடங்கியது. அப்போது ட்விட்டரில், ‘இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. விரைவில் அது சரி செய்யப்படும்’ என்ற அறிவிப்புச் செய்தி தோன்றியது. பின்னர் 8.08 மணிக்கு மீண்டும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது.

2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் ட்விட்டர் சமூக வலைதளம் தொடங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள ட்விட்டர் தற்போது உலகம் முழுதும் 330 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon