மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: பாசிப்பருப்பு - ஜவ்வரிசி பாயசம்!

கிச்சன் கீர்த்தனா: பாசிப்பருப்பு - ஜவ்வரிசி பாயசம்!

தேவையானவை:

பாசிப்பருப்பு - 1 கப்

ஜவ்வரிசி - 1/4 கப்

வெல்லம் - சீவியது 1 கப்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 10

கிஸ்மிஸ் பழம் - 1 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய் - 2

தேங்காய்ப்பால் அல்லது பால் - 1 கப்

பாசிப்பருப்பு, ஜவ்வரிசி இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும்.

இரண்டையும் சேர்த்துக் கழுவி குக்கரில் 2 கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.

வெந்ததும் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.

வெல்லம் கரைந்து கொதித்ததும் அடுப்பை அணைத்து தேங்காய்ப்பால் அல்லது காய்ச்சிய பால் சேர்க்கவும்.

நெய்யில் முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழம் வறுத்து சேர்க்கவும்.

ஏலக்காய் பொடி செய்து தூவவும்.

சூடாகப் பரிமாறவும்.

கீர்த்தனா சிந்தனைகள் :

கல்யாண பந்தியில் சாப்பிடும்போது சேர்க்கு பின்னால் நின்னுட்டு இவன் எப்போ சாப்பிட்டு எந்திருப்பான் என்றொரு சூழ்நிலை எதிரிக்கும் வரக்கூடாது..!

இவனுங்க பாயசம் எங்கடான்னா கேட்டு ரெண்டு நாளைக்கு உக்காந்திருப்பாங்களாம்... நாங்க பின்னாடி நிற்க கூடாதா? #மொய்_வைத்தோர்_சங்கம்

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon