மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 22 ஜன 2021

மருத்துவ அறிக்கையைக் கேட்க முடியாது!

மருத்துவ அறிக்கையைக் கேட்க முடியாது!வெற்றிநடை போடும் தமிழகம்

வேட்பாளர்கள் மருத்துவ அறிக்கையைத் தாக்கல் செய்யக் கோரிய வழக்கில், சட்டவிதிகளின்படி வேட்பாளர்களிடம் மருத்துவ அறிக்கையைக் கேட்க முடியாது என்று தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி, கோவை மாவட்டம், ஆனைமலையைச் சேர்ந்த சுப்பையா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கின் விசாரணையில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களும் மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பாக முடிவெடுக்க, மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று (ஏப்ரல் 17) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படியும், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளின்படியும் வேட்பாளரின் மருத்துவ அறிக்கையைக் கேட்க முடியாது’ என்றும், ‘எனவே மனுதாரின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி கிருபாகரன், ‘பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் அனைத்தையும் தெரியப்படுத்த வேண்டும்’ என்று கூறினார். மேலும், பதில் மனுத் தாக்கல் செய்ய மத்திய சட்ட ஆணையம் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon