மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 31 மா 2020

பேச்சுவார்த்தை விபரம்!

பேச்சுவார்த்தை விபரம்!

தமிழக அரசு சார்பில் திரைத்துறை வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இன்று காலை முத்தரப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் காலை 11.30 க்கு தொடங்கிய கூட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு இரு தரப்பினரும் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

திரையரங்குகளை கணினி மயமாக்கி டிக்கெட் விற்பனையை ஒருங்கிணைக்கும் இணைய தளத்தை அரசே ஏற்பாடு செய்து தருவதாக உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களைப் போல திரையரங்க பராமரிப்பு கட்டணம் (TMC) நிர்ணயம் செய்ய அரசு உத்திரவாதமளித்துள்ளது. டிஜிட்டல் கட்டணம் வாரத்திற்கு 4000 ரூபாய் கட்டணத்தில் பிற நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. கியூப், யுஎஃப்ஓ என இரு நிறுவனங்களும் குறைக்க முடியாது என அடம் பிடித்து வருவதால் அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற இருப்பதால் மற்ற முழு விபரங்கள் நாளை காலை 7 மணி பதிப்பில்..

செவ்வாய், 17 ஏப் 2018

அடுத்ததுchevronRight icon