மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 31 மா 2020

மசூதி குண்டுவெடிப்பு தீர்ப்பு : சில கேள்விகள்!

மசூதி குண்டுவெடிப்பு தீர்ப்பு : சில கேள்விகள்!

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு தீர்ப்பு இந்துத்துவ பயங்கரவாதிகளை விடுதலை செய்வதற்கான முன்மாதிரியாக இருக்கிறதா? அல்லது இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

2007 ஆம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத்தின் மெக்கா மசூதியில் நிகழ்த்தப்பட்டகுண்டு வெடிப்பு வழக்கில். 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்து அமைப்புகளின் சிலர் உட்பட, குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் ஆதாரம் இல்லாததால் நேற்று (ஏப்ரல் 16) விடுவிக்கப்பட்டனர்.

இதுபோன்று 2006ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டுவீச்சிலும் 2007 ஆம் ஆண்டின் அஜ்மீர் தர்கா குண்டுவீச்சிலும் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.

இந்துத்துவ பயங்கரவாதம் என்று எதுவும் கிடையாது. என்பதும், பயங்கரவாதம் என்பது ஒரு சமூகத்தில் இருந்து மட்டுமே உருவாகிறது என்பதும் இந்த தீர்ப்பின் மூலம் செய்தியாக சொல்லப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர் டிஎஸ் சுதிர் கூறுகிறார்

“2007 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி வெள்ளிகிழமை அன்று மெக்கா மசூதியில் ஏராளமான மக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் நகரமே துண்டானது போல் இருந்தது” என்று கூறுகிறார்.

அன்றைய தினம் நான் தான் முதலில் மசூதிக்கு சென்றேன் என நினைக்கின்றேன். அப்போது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் மசூதியின் முழு பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நகரின் மிக முக்கியமான இஸ்லாமிய வழிபாட்டு தலம் ஏன் இலக்கு வைக்கப்பட்டது என்று எல்லோருடைய மனதிலும் கேள்வி எழுப்பப்பட்டது. உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளும் அவ்விடத்தில் ஆட்கொண்டன.

அந்த சமயத்தில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த குண்டுவெடிப்பில் 9 பேரும் மசூதிக்கு வெளியே காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உள்பட 14 பேர் பலியாகினர்.

அமைதியான ஓர் இடத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடைபெற்றது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

முதலில் இந்த கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியது வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுவாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆனால் அவர்களுக்கு எதிராக எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லை.

பிறகு இஸ்லாமியர்கள் அவர்கள் வழிபாட்டுத் தலமான மசூதி மீது ஏன் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற கேள்விக்கான பதில் கிடைப்பதற்கு போலீசார் பலரிடமும் விசாரணை நடத்தி வந்தனா் . ஆனால் அதிலும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதைதொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இளைஞர்கள் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார்கள் என்பது அவர்களது குடும்பங்களுக்கு கூட தெரியாமல் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த விசாரணையில் அதற்கான பதில் எங்காவது கிடைக்குமா என்று அதிகாரிகள் தேடிக் கொண்டிருந்தனா். விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞர்கள் சித்ரவதை செய்யப்பட்டு, ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

மசூதி குண்டுவெடிப்பு வழக்கு மட்டுமின்றி அவர்கள் மீது வேறு சில வழக்குகளும் பதியப்பட்டது. குஜராத்தில் நடைபெற்ற மதகலவரங்களின் வீடியோக்கள் பிரச்சினைகளை உருவாக்கும் வகையில் பரப்பப்படுவதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதைதொடர்ந்து அவர்கள் 2009 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்களது எதிர்காலம் சிதைந்துவிட்டது. அவர்களின் பணியிடங்களில் களங்கம் ஏற்படுத்தி, சமுதாயத்தால் ஒடுக்கப்பட்டு போலீசாரால் துன்புறுத்தப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது.

தொடர்ச்சி காலை 7மணி பதிப்பில்....

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon