மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 31 மா 2020

ஆடல் பாடலுக்கு நீதிமன்றம் அனுமதி!

ஆடல் பாடலுக்கு நீதிமன்றம் அனுமதி!

கீழூர் கிராமத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேலூர் மாவட்டம் கீழூர் கிராமத்தில் உள்ள வேந்தியப்பன் திருக்கோயிலில் வரும் 24ஆம் தேதி திருவிழா நடைபெற உள்ளது. அன்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் அந்த நிகழ்ச்சியை நடத்தக் காவல் துறை அனுமதி மறுத்திருந்தது. எனவே ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவபிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்பு இன்று (ஏப்ரல் 17) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுத் தீர்ப்பளித்துள்ளார். இதன்படி ஏப்ரல் 24ஆம் தேதி திட்டமிட்டபடி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொதுவாகவே ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் சண்டை சச்சரவுகள் நடைபெறும் வாய்ப்புகள் இருப்பதால் அந்நிகழ்ச்சிகளை நடத்தக் காவல் துறை அனுமதி மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon