மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 31 மா 2020

சென்னை: இருண்டு கிடக்கும் நெடுஞ்சாலைகள்

சென்னை: இருண்டு கிடக்கும் நெடுஞ்சாலைகள்

கொல்கத்தா - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் பராமரிக்கப்படாமல் இருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த கவுதமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "காவாங்கரை இணைப்பு முதல் ரெட் ஹில்ஸ் பிரதான சாலை வரை அதிக வாகனங்கள் செல்லக்கூடிய சாலையில் மின் விளக்குகள் எரியாமல் இருப்பதால் சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

அந்த முக்கியச் சலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதோடு, அதிக அளவு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இது தொடர்பாக மின்சாரத் துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோல புழல் சிறைச்சாலை, காவாங்கரை, கேம்ப், சைக்கிள் கடை அடங்கிய புழல் ஜங்‌ஷனில் போக்குவரத்து சிக்னல் இல்லை; போக்குவரத்தை சீர்படுத்த போதுமான காவலர்களும் இல்லை. இது தொடர்பான புகாருக்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மின்சாரத் துறை மற்றும் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

கொல்கத்தா - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்கு எரிய போதிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை ஏற்ற நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 20ஆம் தேதி விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon