மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 31 மா 2020

பிக் பாஸ் அடுத்த சீசனில் புது முயற்சி!

பிக் பாஸ் அடுத்த சீசனில் புது முயற்சி!

தமிழில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இந்தியாவில் இந்நிகழ்ச்சி பிரபலமானது பாலிவுட்டில்தான். தமிழில் எப்போது இரண்டாவது சீசன் என யோசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில், தற்போது பாலிவுட்டில் 12ஆவது சீசனுக்குத் தயாராகிறார்கள்.

இந்தியில் தொடங்கி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் பல மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி பரவிவிட்டது. ஒரு மொழியில் முடிந்ததும், அடுத்த மொழியில் தொடங்குவது என வரிசையாக பிக் பாஸ் நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், ரசிகர்கள் மொழிகளைத் தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சிகளை ரசிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, ஏதாவது புதுமையைப் புகுத்த வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சியின் தன்மையை மாற்றியிருக்கின்றனர்.

இது குறித்து இந்தி பிக் பாஸ் டீம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “விரைவில் பிக் பாஸ் 12 வருகிறது. இந்த முறை எங்களுக்குத் தேவை ஜோடிகள். உங்கள் பார்ட்னரையும் உடன் அழைத்துவந்து பிக் பாஸ் வீட்டுக்குள் நடைபெறும் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்குங்கள். தற்போது ஆடிஷன் தொடங்கிவிட்டது” என்று கூறியிருக்கிறார்கள்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon