மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 31 மா 2020

ரேஷன் கடைகளில் இனி கம்பு - சோளம்!

ரேஷன் கடைகளில் இனி கம்பு - சோளம்!

ஏழை மக்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க சோளம், கம்பு போன்ற தானிய வகைகளைப் பொது விநியோக அமைப்பின் மூலம் விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உணவுச் சட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் போன்ற பொது விநியோக அமைப்பு மூலம் சுமார் 81 கோடி பயனாளிகளுக்கு மிக அதிகமான மானிய விலையில் (ஒரு கிலோவுக்கு ரூ.1 முதல் 3 ரூபாய்) உணவு தானியங்களை, முக்கியமாக அரிசி மற்றும் கோதுமையை அரசு வழங்கி வருகிறது. வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், ’பொது விநியோக அமைப்பில் சிறு தானியத் தினை வகைகளை விநியோகிப்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்திருந்தது. பொது விநியோக அமைப்பில் தினை வகைகளைச் சேர்த்துக்கொள்ள இக்குழு பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

மிக அதிகமான ஊட்டச்சத்துகள் நிறைந்த சில தானிய வகைகளையும் அரசு அறிவித்துள்ளது. இதில் சோளம், கம்பு, வரகு, ராகி, மண்டுவா, கங்கனி, கக்குன், வரகரிசி, சவா, சன்வா, ஜங்கோரா, குட்கி, குட்டு மற்றும் சவுளை ஆகிய தினை வகைகள் அடங்கும். நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யத் தினை வகைகள் சிறப்பாக உதவி புரியும் எனவும், இப்பயிர்கள் பருவ நிலையைத் தாக்குப்பிடிக்கக் கூடியவையாகவும் இருப்பதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தானிய வகைகள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைத்து, நீரிழிவுக்கு எதிராகச் செயல்படக்கூடிய திறன் பெற்றவையாகவும் இருப்பதாக வேளாண் அமைச்சகம் கூறியுள்ளது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon