மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

ஏடிஎம் காதல்கள் 2.0: அப்டேட் குமாரு

ஏடிஎம் காதல்கள் 2.0: அப்டேட் குமாரு

ஸ்டெர்லைட், காவிரின்னு பேசிக்கிட்டு இருந்தவங்க மெல்ல நிர்மலா ஆடியோ பக்கம் திரும்பிட்டாங்க. ஆளுநர் பேர் வரைக்கும் ஆடியோல அடிபடுறதால நம்ம ஆளுங்க விடாம பிடிச்சுகிட்டாங்க. அடிக்குற வெயில்ல இதுவேற.. ஆமாம் வெயில்ன்னு சொன்ன உடனே தான் ஞாபகத்துக்கு வருது. வடக்க ஏடிஎம் எல்லாம் காலியா இருக்காம்ல. மறுபடியும் ஏடிஎம் வாசல்ல காத்துகிடக்குறமாதிரி கொண்டாந்துட்டாங்களே. போனதடவையாவது நவம்பர், டிசம்பர் மாசம் நின்னோம். அந்த கூட்டத்துலயும் பலருக்கு லவ் ஓகே ஆச்சு. ஏன்னா கிளைமேட் அப்படி. ஆனா அதுக்கே நூத்துக்கணக்குல பலியானாங்க. இந்த தடவை ஏப்ரல், மே மாசம் வெயிலுக்குள்ள நிப்பாட்டி எத்தனை உசுர வாங்கப்போறாங்களோ.. அப்டேட்டை பாருங்க இருக்குற நூறு ரூபாயையும் எடுத்துட்டு வந்துடுறேன், அப்புறம் அதையும் செல்லாதுன்னு சொல்லிருவாங்க..

@love_twitz

நிர்மலாதேவிக்கு அமைக்கப்பட்ட விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம்

அட வெக்கங்கெட்டவிங்களா

@senthilcp

வட மாநிலங்களில் ATM சேவை முடங்கியது - செய்தி

நம்மாளுங்க குறிப்பிட்ட தொகையை ரெடிகேஷாக வைத்துக்கொள்ளவும்.எதுக்கும் உதவும்

@senthilcp

உயர்கல்வித்துறையில் தமிழகம் சராசரியைவிட அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளது: அமைச்சர் கே.பி. அன்பழகன் - # நிர்மலா தேவி ஆடியோவை சொல்றார் போல

@HAJAMYDEENNKS

நிர்மலா தேவியை போலீஸ் கைது செய்திருக்கும்போது கவர்னர் ஏன் தனியாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் ? போலீஸ்ல உண்மையை சொல்லிடக்கூடாதுன்னா ?!

@kathir_twits

வட மாநிலங்களில் ATM சேவை முடங்கியது - செய்தி

எல்லா பணத்தையும் எடுத்துட்டு பாரின் டூர் போயிட்டாரோ !!!

@kathir_twits

ATM காவலாளிகள் அவ்வப்போது ரிசர்வ் வங்கி கவர்னராக மாறி விடுகின்றனர் !!!

@Chellakutty_Dee

சுத்துறதே உலகஉருண்டை நிறுத்தினாலும் நிறுத்தும் ஆனா மோடி நிறுத்தவே மாட்டார் போல

@sultan_Twitz

பீகார் , உ.பி. உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஏ.டி.எம்.களில் பணம் கிடைக்காமல் மக்கள் அவதி - செய்தி #

எல்லாத்தையும் தான் தொழில் அதிபர்களுக்கு குடுத்து வெளிநாட்டுக்கு அனுப்புனா அப்புறம் எப்படி பணம் கிடைக்கும்..

@Srilaksman0

அதிக மதிப்பெண்கள் பெற்றவனுக்கு நல்ல வேலை உரித்தானதுதான்; ஆனால் அவன் திறமையானவனா? - என்பது கேள்விக்குரிய ஒன்று.

@musthafa_faizal

ட்விட்டர்ல பிரபலம் ஆகனும்னு

நாம எடுக்குற ரிஸ்க...

கொஞ்சம் வாழ்க்கைல எடுத்துர்ந்தோம்னா...?

கொஞ்சமாச்சும் தப்பிச்சுர்ப்போம்.

@DAnandaRaj

உச்சி வெய்யிலிலும் "ஐஸ் வைத்து" வியாபாரம் செய்துவிடுகிறார்.

ஐஸ் வியாபாரி

Bala Ji J

ஓட்டலில் தின்னவன எல்லா GSTக்கு பயந்து ரோட்டுக்கடையில் தின்னவைத்தது.

பீப் தின்னாதவனக்கூட திங்கவைத்தது விஜய்ப்படம் பார்க்காதவனக்கூட பார்க்கவைத்தது.

பா.ஜ.க தமிழக வளர்ச்சியில் பல விஷயங்களை செய்துள்ளது..

@Thaadikkaran

காவிரி விவகாரம் : பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

அவர் பாரின் போய் 2 நாள் ஆச்சு..!

@naatupurathan

Asifa க்களுக்காக பொங்கிக்கொண்டே தமிழிசைகளை அவமானப்படுத்துவதுதான் முற்போக்குத்தனமோ?

ஆசிஃபாக்களுக்காக போராடுவது மட்டுமல்லாது, அதை மடைமாற்ற நினைக்கும் தமிழிசைகளை மிதிப்பதும் பெண்ணினத்தைக் காக்கும் முற்போக்கு சிந்தனைதான்!

@mekalapugazh

"எப்பப்பாரு...திண்ணையே கதி.."

இது பாட்டி.

"எப்பப்பாரு..அந்தத் தெருமுனை டீக்கடையே கதி.."

இது அம்மா.

"எப்பப்பாரு ..அந்த ஃபோனே கதி.."

இது மனைவி.

@ajmalnks

வட மாநிலங்களில் ATM சேவை முடங்கியது - செய்தி

சுனாமி நம்மை நோக்கிதான் வருது எல்லோரும் மேடான பகுதியை நோக்கி ஓடுங்க.

@Thaadikkaran

மான் வேட்டை வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி- செய்தி

இவராவது திரும்பி வருவாரா

@Deepa Janakiraman

தனிநபர் ஊடகமாக சமூக வலைதளங்கள் மாறியதன் விளைவு, நேரடியாக நம்மால் ஆடியோக்களைக் கேட்க முடிகிறது. இல்லையேல்?

இத்தனை வருட காலங்களில் வெளிப்பட்டிருக்க வேண்டிய ஒன்றின் ஆரம்பமே இது.

@iamkarthikeyank

கொடுப்பவருக்கும்,கொடுப்பதாய் சொல்பவருக்கும் தெரியும் அவை இலவசமல்ல, முதலீடுகளென்று

@sendil

உங்கள் பொறுமையின் எல்லை என்னனு தெரியனுமா , ஒரு நாள் ஆபீஸ்க்கு லீவ் போட்டு பேங்க் போயிட்டு வாங்க !!

@Kozhiyaar

புதுசா அடிச்ச 2000, 500 ரூபாய் நோட்டும் கருப்பா மாறி பதுக்கப்பட்டதால் ஏடிஎம் லாம் காலி ஆயிடுச்சோ!?

@Abdul Hameed Sheik Mohamed

ஸ்வாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் சிறையில் மின்சாரம் பாய்ந்து இறந்ததுகுறித்து அப்போது பெரும் சர்ச்சைகள் வெடித்தன. அது கொலை என்று பரவலாக கருதப்பட்டது. ராம் குமார் ஒரு தலித் என்பதால் பல்வேறு சமூக நீதி அமைப்புகள் அவருக்காக நீதிகேட்டு போராடின. ராம்குமாரின் வழக்கறிஞரின் போட்டிகள் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்தன. எல்லோரும் கேட்டது ராம்குமாரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட். அரசு அதைத்தர பிடிவாதமாக மறுத்தது. பிறகு எல்லோரும் ராம்குமாரை மறந்துவிட்டார்கள்.

ஓராண்டிற்குப்பிறகு பத்திரிகையில் ஒரு பெட்டி செய்தி: ராம்குமாரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் அவரது பெற்றோரிடம் தரப்பட்டது என்றும் அதில் அவரது உடலில் எட்டு இடங்களில் மின்சாரம் பாய்ந்திருக்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

இந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் அன்று இதை பரபரப்பாகபேசிய யாருக்குமே முக்கியமில்லையா? ஒரு போஸ்ட்மார்டம் ரிப்போர்டை கொடுக்க் ஏன் ஒரு வருடம் என்று யாருமே ஏன் கேட்கவில்லை?

அந்த போஸ்ட்மார்ட்டம் ரப்போர்ட்டில் யாருக்குமே சந்தேகமில்லையா?

அவ்வளவு பெரிய பிரச்சினை எப்படி ஒரு பெட்டி செய்தியாக கடந்து சென்றது?

இப்படித்தான் மவுலிவாக்கம் விபத்து கடந்து சென்றது.

இப்படித்தான் ஜெயலலிதாவின் மர்மமரணமும் கடந்து செல்லும

இதில் நிர்மலா தேவி விவகாரம் எம்மாத்திரம்?

-லாக் ஆஃப்

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon