மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஏப் 2020

ஈரோடு: இந்த வாரச் சந்தை நிலவரம்!

ஈரோடு: இந்த வாரச் சந்தை நிலவரம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த ஏலத்தில் ரூ.8.5 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதில் அந்தியூர், பர்கூர், அத்தாணி, சென்னம்பட்டி, ஒலகடம், வெள்ளித்திருப்பூர், எண்ணமங்கலம் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து ராமாபுரம், மாதேஸ்வரன் மலை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர்.

மொத்தம் 35,000 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். இதில் சிறிய தேங்காய் ஒன்று ரூ.4.20க்கும், பெரிய தேங்காய் ஒன்று ரூ.16.35க்கும் விற்பனையானது. ஆக மொத்தம் தேங்காய்கள் ரூ.3,25,000க்கும், கொப்பரை தேங்காய் ரூ.2,50,000க்கும் விற்பனையானது.மேலும் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்ட 35 மூட்டை வெள்ளை எள் ரூ.2,00,000க்கு விற்பனையானது. 1 மூட்டை ஆமணக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.48.49க்கு என மொத்தம் ரூ.5,000 க்கு விற்பனையானது. மக்காச்சோளம் 60 மூட்டைகள் ரூ.50,000க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆக மொத்தம் வேளாண் விளைபொருட்கள் ரூ.8,30,000க்கு விற்பனையாயின.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon