மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 17 ஏப் 2018

ரசாயன இறக்குமதிக்குக் கட்டுப்பாடு?

ரசாயன இறக்குமதிக்குக் கட்டுப்பாடு?

பிரேசில், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வேதியியல் பொருட்களுக்கு இறக்குமதிக் குவிப்பு வரி விதிக்க விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

பெயின்ட் தயாரிப்புக்கும், தோல் தொழிற்சாலைகளுக்கும் பயன்படும் வேதியியல் பொருட்கள் பிரேசில், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றை அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்வதால் உள்நாட்டுத் தொழில் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய நிறுவனங்கள் இறக்குமதி குவிப்பு மற்றும் இதர வரிகளுக்கான பொது இயக்குநரகத்தில் (டி.ஜி.ஏ.டி.) முறையிட்டுள்ளன.

இதுகுறித்து டி.ஜி.ஏ.டி. வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பிரேசில், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து நாட்டிலிருந்து பெயின்ட் மற்றும் தோல் துறைக்குப் பயன்படும் சில வேதியியல் பொருட்கள் அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கியுள்ளது’ என்று கூறியுள்ளது. அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால் அவற்றுக்கு இறக்குமதி குவிப்பு வரி விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon