மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

வறுமையை ஒழிக்கும் ஆடு!

வறுமையை ஒழிக்கும் ஆடு!

உலக அளவில் ஆடுகளை அதிகமாகக் கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. விவசாயிகளின் வருவாயை 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கவும், அவர்களின் வறுமையைப் போக்கவும் இந்தியாவில் ஆடுகளின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கிராமப்புறங்களில், முக்கியமாக உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஆடுகளின் உற்பத்தியை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து டெல்லியில் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் இரண்டு நாள் கூட்டத்துக்கு சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக அரசுடனும், பில்கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் மற்றும் அக்ரி சொலூஷன்ஸ் ஆகியவற்றுடனும் சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் கூட்டணி அமைத்துள்ளது.

இது குறித்து, சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஆடு வளர்த்தல் நல்ல வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய தொழிலாகும். ஏழைக் குடும்பங்கள், முக்கியமாகத் தொலைதூர, பழங்குடி மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், ஊட்டச்சத்து அளிக்கவும் ஆடு வளர்ப்பு உதவி புரியும். ஆடு வளர்த்தலில் மிகக் குறைவான முதலீடும், உள்ளீட்டுச் செலவுகளுமே தேவைப்படுகின்றன. ஆடுகள் வளமாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய விலங்குகளாகவும், வறட்சி நிலங்களில் பிழைக்கக்கூடியவையாகவும் உள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் ஆடுகளின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மிகவும் லாபகரமான சர்வதேச ஆட்டுச் சந்தையில் இந்தியா தனது பங்கை அதிகரித்து நல்ல லாபத்தை ஈட்டிக் கொள்ளலாம் என்று சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon