மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 31 மா 2020

ஏப்ரல் 20: சிறப்புப் புத்தகக் கண்காட்சி!

ஏப்ரல் 20: சிறப்புப் புத்தகக் கண்காட்சி!

சென்னையில், சிறப்புப் புத்தகக் கண்காட்சி ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புத்தகச் சங்கமம் நடத்தும் 6ஆவது சிறப்பு புத்தகக் கண்காட்சி ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 6 நாட்கள் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெறவுள்ளது. 20ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வரியியல் வல்லுநர் ச.ராஜரத்தினம் தலைமையில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார்; அன்று இரவு 9 மணி வரை விற்பனை நடைபெறும். ஏப்ரல் 21ஆம் தேதி முதல் அடுத்த 5 நாட்களும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும்.

ஏப்ரல் 23ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் புத்தகர் விருது வழங்கும் விழா நடைபெறும். அதில் கலந்துகொள்ளும் கவிஞர் வைரமுத்து புத்தகர் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

ஏப்ரல் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு நான் ஏன் (சு)வாசிக்கிறேன்? என்ற தலைப்பில் கவிஞரும் நடிகருமான ஜோ மல்லூரி, இயக்குநர் கவிதாபாரதி ஆகியோர் உரையாற்றுகின்றனர். 25ஆம் தேதி மாலை 6 மணி அளவில் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா நடைபெறுகிறது. புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 9500130417 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அதேபோல், புத்தகக் கண்காட்சியில் அனைத்துப் புத்தகங்களும் 50% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon