மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 31 மா 2020

நக்சல் ஏரியா: பெருகும் மொபைல் டவர்கள்!

நக்சல் ஏரியா: பெருகும் மொபைல் டவர்கள்!

இந்தியாவின் பத்து மாநிலங்களில் நக்சல் தாக்கம் உள்ள பகுதிகளில் 4,000க்கும் அதிகமான மொபைல் டவர்களை அமைத்து அப்பகுதிகளில் தொலைத் தொடர்புச் சேவையை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி பத்து மாநிலங்களில் 4,072 மொபைல் டவர்களை அமைப்பதற்கான முன்மொழிதலுக்கு தொலைத் தொடர்பு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அமைச்சரவைக் குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வெகு விரைவில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் முதற்கட்டமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3,167 கோடி செலவில் ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 2,329 மொபைல் டவர்கள் கட்டமைக்கப்பட்டன.

கூடுதலான மொபைல் டவர்களை அமைப்பதால், இடதுசாரி தாக்கமுடைய பகுதிகளிலும், பாதுகாப்பு சவால்கள் நிறைந்த பகுதிகளிலும் மொபைல் சேவைகளின் ஊடுருவல் அதிகரிக்கும். தற்போது அமைக்கப்படவுள்ள 4,072 மொபைல் டவர்களில், ஜார்கண்ட் மாநிலத்தில் 1,054 டவர்களும், சத்தீஸ்கரில் 1,028 டவர்களும், ஒடிசாவில் 483 டவர்களும், ஆந்திரப் பிரதேசத்தில் 429 டவர்களும், பிகாரில் 412 டவர்களும், மேற்கு வங்கத்தில் 207 டவர்களும், உத்தரப் பிரதேசத்தில் 136 டவர்களும், மகாராஷ்டிராவில் 136 டவர்களும், தெலங்கானாவில் 118 டவர்களும், மத்தியப் பிரதேசத்தில் 26 டவர்களும் அமைக்கப்படவுள்ளன.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon