மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 31 மா 2020

அமர்நாத் கட்டுப்பாடுகள் ரத்து!

அமர்நாத் கட்டுப்பாடுகள் ரத்து!

அமர்நாத் பனி லிங்கத்தைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேசியப் பசுமை தீர்ப்பாயம் விதித்த கட்டுப்பாடுகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 15) உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அமர்நாத் கோயில் 5,000 ஆண்டு பழமையானது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 14,000 அடி உயர மலையில் இந்தக் குகை அமைந்துள்ளது. அமர்நாத் கோயிலில் இயற்கையாகத் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். யாத்திரையாக வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துதர மாநில நிர்வாகத்துக்கு 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அமர்நாத் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குச் செய்து தரப்படும் வசதிகள் குறித்து 2017 நவம்பர் மாதம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கோயில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியது. கோயிலில் பக்தர்களுக்குக் கழிவறை வசதி இல்லை. ஆனால், சாலையோரங்களில் கடைவைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தீர்ப்பாயம் குற்றம்சாட்டியது.

அதைத் தொடர்ந்து, 2017 டிசம்பர் மாதம் ஒலி மாசு காரணமாக கோயிலுக்குள் மணி அடிக்கவும்,பக்தர்கள் சத்தமாக மந்திரங்கள் கூறவும், பக்தர்கள் கோயிலுக்குள் செல்பேசி எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது” என அமர்நாத் குகைக் கோயில் நிர்வாகத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று (ஏப்ரல் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமர்நாத் குகைக் கோயில் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon