மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 31 மா 2020

சமையல் எண்ணெய்: வருவது நின்றால்?

சமையல் எண்ணெய்: வருவது நின்றால்?

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி சென்ற 2017-18 நிதியாண்டில் 10 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகிலேயே சமையல் எண்ணெய்யைப் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தும் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. உள்நாட்டு உற்பத்தியானது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இல்லாததால் இறக்குமதியையே பெருமளவில் சார்ந்திருக்கும் சூழலில் இந்தியா இருக்கிறது. அந்த வகையில் மார்ச் 31ஆம் தேதி நிறைவடைந்த 2017-18 நிதியாண்டில் இந்தியா மொத்தம் 15.57 மில்லியன் டன் அளவிலான சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இதற்கு முந்தைய 2016-17 நிதியாண்டில் 14.21 மில்லியன் டன் அளவிலான சமையல் எண்ணெய் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. சென்ற ஆண்டில் மலேசியா தனது ஏற்றுமதி வரியை ரத்து செய்ததன் விளைவாக இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயிலின் பங்கு 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

மறுபுறம் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதாகக் கூறி கச்சா பாமாயில் இறக்குமதிக்கான வரியை 30 சதவிகிதத்திலிருந்து 44 சதவிகிதமாகவும், ஆர்.பி.டி. பாமாயிலுக்கான இறக்குமதி வரியை 40 சதவிகிதத்திலிருந்து 54 சதவிகிதமாகவும் மத்திய அரசு உயர்த்தியது. எனினும் இறக்குமதியைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்தியா பெரும்பாலும் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிடமிருந்து பாமாயிலை இறக்குமதி செய்கிறது. அதேபோல, சோயாபீன் எண்ணெய்யை லத்தீன் அமெரிக்காவிலிருந்தும், உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து சூரிய காந்தி எண்ணெய்யையும் இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon