மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 17 நவ 2019

இனி டெலிட் செய்தால் வருத்தப்பட வேண்டாம்!

இனி டெலிட் செய்தால் வருத்தப்பட வேண்டாம்!

தற்செயலாக டெலிட் செய்த ஃபைல்களை மீண்டும் டவுன்லோடு செய்து கொள்ளும் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் அப்பில் தினந்தோறும் வீடியோ, ஆடியோ, ஜிஃப், புகைப்படங்கள், டாக்குமென்டுக்கள் என பல தரப்பட்ட ஃபைல்களை நாம் பகிர்ந்துவருகிறோம். இதில் சில சமயங்களில் நாம் டவுன்லோடு செய்த ஃபைல்களைத் தெரியாமல் அழித்துவிட்டுப் பின்பு வருத்தப்படுவதுண்டு. தற்போது வாட்ஸ் அப் 2.18.110 வெர்ஷனில் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாம் டவுன்லோடு செய்த ஃபைல்கள், தெரியாமல் அழித்துவிட்டால், மீண்டும் அதை டவுன்லோடு செய்யும் புதிய வசதி இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பீட்டாஇன்ஃபோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது வாட்ஸ் அப்பின் 2.18.106 மற்றும் 2.18.110 வெர்ஷனில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் பயனர்கள் தங்கள் சாட் ஹிஸ்டரியை டெலிட் செய்த பிறகும் மீண்டும் அதனை டவுன்லோட் செய்துகொள்ள முடியும். அதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வாட்ஸ் அப்பில் 30 நாட்கள் வரையிலான தகவல்களைத் திரும்பப்பெறும் வசதி இருந்தது. தற்போது அது 60 நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வசதி ஆண்ட்ராய்டு போன்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஐஓஎஸ் பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon