மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

மேற்கு தொடர்ச்சி மலை: மீண்டும் ஓர் அங்கீகாரம்!

மேற்கு தொடர்ச்சி மலை: மீண்டும் ஓர் அங்கீகாரம்!

இயக்குநர் லெனின் பாரதி இயக்கியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்திற்குச் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதி தயாரிப்பில் இயக்குநர் லெனின் பாரதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மேற்கு தொடர்ச்சி மலை’. கேரள எஸ்டேட்டுகளில் குறைந்த கூலிக்கு உழைக்கும் தமிழர்களைப் பற்றிய படமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சொந்த நிலம், வீடு இல்லாமல் பல ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்யும் இவர்களின் நிலை, வெளியுலகம் அறியாத ஒன்று. அதனை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது இந்தப் படம். இதில் ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய இளையராஜா இசை அமைத்துள்ளார்.

பல்வேறு திரைப்படவிழாக்களில் கலந்துகொண்டு விருதுகள் பெற்றுவருகிறது. மேலும் திரையரங்கில் ரிலீஸ் செய்வதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் துளுவில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை இப்படம் பெற்றுள்ளது.

ஏற்கனவே பஞ்சாபில் நடைபெற்ற குளோபல் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது ‘மேற்கு தொடர்ச்சி மலை’க்குக் கிடைத்தது. மேலும், கேரளாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘தற்போதைய சினிமா’ என்ற தலைப்பில் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நியூயார்க் இந்தியன் திரைப்பட விழாவில் பங்கேற்று சிறந்த திரைக்கதைக்கான விருதுக்குத் தேர்வாகியது. தொடர்ந்து பல விருதுகள் வென்றுவரும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon