மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

கைவினைக் கலைஞர்களுக்கு மத்திய அமைச்சர் அறிவுரை!

கைவினைக் கலைஞர்களுக்கு மத்திய அமைச்சர் அறிவுரை!

இந்தியாவின் கைவினைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் கலைஞர்கள் தங்களது திறனை மேம்படுத்தி அத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்று ஜவுளித் துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியக் கண்காட்சி மையத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி ஏழாவது ’இந்திய உள்நாட்டுக் கண்காட்சி 2018’ நிகழ்ச்சியை மத்திய ஜவுளி மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடங்கி வைத்தார். கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள இந்த மூன்று நாள் கண்காட்சியில், வடகிழக்குப் பிராந்தியத்தின் மீது அதிகக் கவனம் செலுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள தயாரிப்பு மையங்களிலிருந்து பல்துறை சார்ந்த 700க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். இக்கண்காட்சியில் மரபு சார்ந்த கல்விக் கழகம், வர்த்தகக் கண்காட்சி, தொழில் ஆராய்ச்சி மற்றும் நிர்வாகப் பிரிவு ஆகியவற்றை ஸ்மிருதி இரானி பார்வையிட்டார்.

கைவினைக் கலைஞர்கள் தங்களது திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்த ஸ்மிருதி இரானி, இந்தியாவில் பட்டு உற்பத்தி அதிகரித்து வருவதாகவும், இப்பிரிவில் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவின் பட்டு உற்பத்தி 2016-17 நிதியாண்டில் 30,348 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால் 2017-18 நிதியாண்டில் அது 33,840 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்டு உற்பத்தித் துறை 6.40 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் ஜவுளி மேம்பாட்டுத் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதில் பட்டு உற்பத்தியாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon