மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 31 மா 2020

முட்டை: தொடர்கதையாகும் விலை உயர்வு!

முட்டை: தொடர்கதையாகும் விலை உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த சில வாரங்களில் 25 காசுகள் அதிகரித்துள்ளது.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயம் செய்யும் விலைக்கே முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை அதிகபட்சம் ரூ.5.16 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இதன் விலை படிப்படியாகக் குறைக்கப்பட்டு மார்ச் மாதத்தில் ரூ.3.25க்கு விற்பனையானது. ஏப்ரல் முதல் வாரத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.3.35 ஆக இருந்தது.

பின்னர், ஏப்ரல் 12ஆம் தேதி நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.3.40க்கு விற்கப்படுகிறது. இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற மண்டலங்களில் முட்டை விலை பின்வருமாறு:

சென்னை - ரூ.3.50, ஹைதராபாத் - ரூ.3.02, விஜயவாடா, தனுகு - ரூ.3.11, பார்வாலா - ரூ.3.22, மும்பை - ரூ.3.52, மைசூர் - ரூ.3.38, பெங்களூரு - ரூ.3.35, கொல்கத்தா - ரூ.3.68, டெல்லி - ரூ.3.35.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon