மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 31 மா 2020

தினம் ஒரு சிந்தனை: இயற்கை!

தினம் ஒரு சிந்தனை: இயற்கை!

- சர் சி.வி.ராமன் (7 நவம்பர் 1888 - 21 நவம்பர் 1970). புகழ்பெற்ற இந்திய அறிவியல் அறிஞர். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும்போது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலை நீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலை நீள மாற்றத்துக்கு ராமன் விளைவு (Raman Effect) என்று பெயர்.

இக்கண்டுபிடிப்புக்குத்தான் 1930ஆம் ஆண்டு அவருக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு கிடைத்தது. 1924ஆம் ஆண்டு லண்டன் ராயல் அமைப்பின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ராமன் அவர்களுக்கு பிரிட்டிஷ் பேரரசின் வீரர் என்ற பட்டத்தை அளித்துக் கவுரவித்தது. இப்பட்டத்தைப் பெற்றதால்தான், இவர் சர் சி.வி.ராமன் என்று அழைக்கப்படுகிறார்.

சரியான கேள்விகளைக் கேளுங்கள். இயற்கை தன் ரகசியங்களின் கதவைத் திறக்கும்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon