மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 31 மா 2020

கார்த்தியைக் கைது செய்ய தடை நீடிப்பு!

கார்த்தியைக் கைது செய்ய தடை நீடிப்பு!

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்வதற்கான தடையை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி தரப்பிலிருந்து நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை மார்ச் 24ஆம் தேதி விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி, கார்த்திக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ஏப்ரல் 16ஆம் தேதிவரை அவரை கைது செய்ய கூடாது என சிபிஐக்குத் தடை விதித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி, நேற்று (ஏப்ரல் 16) வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மே 2ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையும் அன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை வரும் 27ஆம் தேதி வரை கைது செய்வதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon