மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 23 அக் 2019

ஏழு டிஎம்சி தண்ணீர்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஏழு டிஎம்சி தண்ணீர்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

பவானி சாகர் அணையிலிருந்து கீழ் பவானி கால்வாயில் ஏழு டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட கோரிய மனுவுக்குத் தமிழக அரசு பதிலளிக்க நேற்று (ஏப்ரல் 16) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பவானி சாகர் அணையிலிருந்து கீழ் பவானி கால்வாய் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த விவசாய நிலத்தை இரு பிரிவுகளாகப் பிரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த இரண்டாண்டுகளாகப் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடவில்லை எனவும், லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பயிர்களுக்குப் பாய்ச்சப்படுவதாகவும் எனவே, பவானி ஆற்றில் ஏழு டிஎம்சி தண்ணீர் திறந்து விடக்கோரி கீழ் பவானி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று (ஏப்ரல் 16) விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு குறித்து ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon