மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

பியூட்டி ப்ரியா: கை கால் நகங்களைப் பாதுகாக்க!

பியூட்டி ப்ரியா: கை கால் நகங்களைப் பாதுகாக்க!

அடிக்கடி கை கால் விரல்களைச் சோப்பு போட்டுக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

கை கால்களைக் கழுவியதும் ஈரம் போகத் துடைத்துவிடுங்கள். இது மிக முக்கியம்.

வேதிப்பொருட்களின் பயன்பாட்டால் நகங்கள் உடைய வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க குளியல் சோப்பை அடிக்கடி மாற்றாதீர்கள். ஒரே சோப்பைப் பயன் படுத்துங்கள்.

மற்றவர்கள் பயன்படுத்திய சோப்பைப் பயன்படுத்தக் கூடாது.

அடிக்கடி நகத்துக்கு பாலிஷ் போடாதீர்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆசைக்குப் போட்டுக்கொள்ளலாம். பாலிஷ்களை அடிக்கடி மாற்றாதீர்கள்.

அடிக்கடி பாலிஷ் போட்டுக்கொள்பவர்கள் பாலிஷை அகற்றுவதற்கு பாலிஷ் ரிமூ வரைப் பயன்படுத்துவார்கள். நக பாலிஷைவிட பாலிஷ் ரிமூவர் தான் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே கவனம் தேவை!

நகம் வறண்டு போயிருந்தால் பாலிஷுக்குப் பதிலாக மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தலாம்.

மற்றவர்கள் பயன்படுத்திய நகவெட்டியைப் பயன்படுத்தக் கூடாது.

காலுக்குச் சரியான அளவில், பொருத்தமான காலணிகளையும் ஷூக்களையும் அணிய வேண்டியது முக்கியம். ஈரத்தை உறிஞ்சும் காலுறைகளை அணியாமல் வெறுமனே ஷூக்களை மட்டும் அணியக் கூடாது – இது அதைவிட முக்கியம்.

நகத்தின் அளவிலோ நிறத்திலோ திடீர் மாற்றம் தெரிந்தால், உடனே மருத்துவரிடம் காண்பித்து ஆலோசித்துக்கொள்ளுங்கள்.

நகங்களை பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகள் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் நகத்தில் ஏற்படும் சொத்தையானது விரல்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி, உடல் மற்றும் மன உறுதியை குலைத்துவிடுகின்றன. ஒவ்வாமை மற்றும் பலவித தோல் நோய்களால் தோன்றும் நக சீர்குலைவை சீர்செய்யும் அற்புத மூலிகை நீர்மேல் நெருப்பு.

அம்மானியா பேசிரொ என்ற தாவரவியல் பெயர் கொண்ட லித்ரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்தச் செடிகளின் இலைகளிலுள்ள லாவ்சோன் என்னும் பொருள் நகத்தை தாக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகளை கொல்லும் தன்மையுடையன. நீர்மேல் நெருப்பு மற்றும் மருதாணி இலைகளை நீர் விட்டுஅரைத்து நகத்தைச் சுற்றி தினமும் தடவி வர, நகச்சொத்தை மாறும்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon