மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

நெற்றியில் பொட்டு: மூதாட்டிக்கு பென்ஷன் மறுப்பு!

நெற்றியில் பொட்டு: மூதாட்டிக்கு பென்ஷன் மறுப்பு!

சென்னையில் கணவர் இறந்த பிறகும் பொட்டு வைத்த காரணத்தினால் 77 வயது மூதாட்டிக்கு ஓய்வூதியம் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் 1993ஆம் ஆண்டு முதல் துறைமுகத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். அவருடைய பென்ஷனை பெறுவதற்கான நடைமுறைகளைச் செயல்படுத்த அவரது மனைவி தேவி, மகன் மற்றும் மருமகளுடன் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த அதிகாரி ரவி அடையாளச் சான்றிதழையும், புகைப்படத்தையும் கேட்டுள்ளார். ரவி கேட்ட அடையாள சான்றிதழ் மற்றும் புகைப்படத்தை அவர்கள் கொடுத்துள்ளனர். ஆனால், மூதாட்டி தேவியையும், அவரின் புகைப்படத்தையும் பார்த்த அலுவலர் ரவி அந்தப் புகைப்படத்தை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளார். காரணம் கேட்டபோது, புகைப்படத்தில் தேவி பொட்டு வைத்திருக்கிறார் என்றும், பொட்டு இல்லாத புகைப்படத்தை தான் ஏற்க முடியும் எனக் கூறியுள்ளார்.

தேவியின் புகைப்படம் அவரது கணவர் இறப்பதற்கு முன் எடுக்கப்பட்டது. எனவே, அதில் பொட்டு வைத்திருந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தேவியைப் பொட்டை அகற்றச்சொல்லி புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால், அவர் மனம் உடைந்து போனார். கணவரை இழந்தவர்கள் பொட்டு வைக்கக் கூடாது என்ற அதிகாரியின் எண்ணம் கேவலமானது என தேவியின் மருமகள் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மறுநாள் (ஏப்ரல் 10) அலுவலகம் சென்ற தேவி குடும்பத்தினர் விரைவாக பென்ஷன் பெறுவது தொடர்பான ஆவணங்களை மற்ற ஓர் அதிகாரியிடம் கொடுத்திருக்கின்றனர். அன்றைய தினம் ரவி விடுமுறை என்பதால் அங்கிருந்த அதிகாரியிடம் ரவி குறித்து புகார் தெரிவித்திருக்கின்றனர். அப்போது அதிகாரி கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon