மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கும்!

ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கும்!

மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் நிறைவுற்றவுடன் ஜிஎஸ்டி வருவாய் ரூ.93,000 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு நடைமுறையை ஏற்படுத்தும் நோக்கில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி என அரசு வரி வசூல் செய்கிறது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு முதல் ஐந்து மாதங்களில் வரி வருவாய் ஏற்ற இறக்கத்துடனேயே இருந்தது. மூன்று மாதங்களில் சராசரியாக ரூ.90,000 வருவாய் கிடைத்த நிலையில் கடைசி இரண்டு மாதங்களில் வருவாய் குறைந்து ஐந்து மாத சராசரி வருவாய் ரூ.87,000 கோடியாக மட்டுமே இருந்தது. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் ரூ.84,000 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது.

ஜிஎஸ்டி வரித் தாக்கல் நடைமுறையில் இருந்த சிக்கல்களாலும், வரி செலுத்துவோருக்கு இதுபற்றிய முறையான புரிதல் இல்லாததுமே வருவாய் குறைவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. எனினும் வரித் தாக்கல் நடைமுறைச் சிக்கல்கள் ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைப்பாலும், ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களாலும் தற்போது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. சில பொருட்களின் வரி விகிதங்களும் குறைக்கப்பட்டன. அதேபோல டிசம்பர் மாதத்துக்கு முன்பு ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை முறையாகச் செலுத்தப்படாமல் இருந்தது. மார்ச் மாதத்துக்கான ரிட்டன் தாக்கல்கள் ஏப்ரல் 20ஆம் தேதி நிறைவுறும் நிலையில் இம்மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ.93,000 கோடி முதல் ரூ.95,000 கோடி வரையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon