மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஏப் 2020

கிச்சன் கீர்த்தனா: சீரகக் கொழுக்கட்டை!

கிச்சன் கீர்த்தனா: சீரகக் கொழுக்கட்டை!

தேவையானவை:

புழுங்கல் அரிசி மாவு / கொழுக்கட்டை மாவு/ இடியாப்ப மாவு - 1 கப்

சீரகம் - 1 டீஸ்பூன்

உப்பு - 1/3 டீஸ்பூன்

வெங்காயம் - பொடியாக அரிந்தது 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்)

துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்)

வெந்நீர் - தேவையான அளவு.

செய்முறை:

சீரகம், வெங்காயம், தேங்காய், உப்பை மாவில் போடவும். தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசையவும்.விரலால் கிள்ளி சீடைக்காய் அளவு எடுத்து தட்டிப் போடவும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து கொழுக்கட்டைகளைப் போடவும்.10 நிமிடம் வேக விடவும். 5 நிமிடம் வெந்தபின்பே கரண்டியால் கிளறி விடவும். ( போட்ட உடன் கிளறினால் மாவு வெந்நீரில் கரைந்து விடும்.)

10 நிமிடம் கழித்து வடித்து எடுத்து சூடாக பருப்புத் துவையலுடன் பரிமாறவும்.

கீர்த்தனா சிந்தனைகள்:

வெயில் சீசன் கொளுத்துது. இனி ஏடிஎம்ல பணம் எடுக்றவன் எவனும் உடனே வெளில வரமாட்டாய்ங்க, செக்கு மாடு மாதிரி உள்ளவே சுத்திட்டு இருப்பானுங்க.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon