மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

ஐடியா - வோடஃபோன்: ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து!

ஐடியா - வோடஃபோன்: ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து!

ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் இணைந்து செயல்படும் முடிவால் அதன் 5,000 ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனம் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்ததால் இதர நிறுவனங்கள் கடும் வருவாய் இழப்பைச் சந்தித்து வருவதோடு மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. ஜியோவின் போட்டியைச் சமாளிக்கும் வகையில் இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிகப் பெரிய நெட்வொர்க் நிறுவனங்களான வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்து செயல்படத் திட்டமிட்டன. இந்நிறுவனங்கள் இணைவதற்கான ஒப்புதல் தொலைத் தொடர்புத் துறை தவிர இதர அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்தால் அதன் ஊழியர்கள் பலர் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ஐடியாவில் 11,000 பேரும், வோடஃபோனில் 10,000 பேரும் பணியாற்றுகின்றனர். இரு நிறுவனங்களும் இணைந்த பிறகு அதன் ஊழியர்களில் நான்கில் ஒரு பங்கு ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 5,000 பேர் தங்களது வேலையை இழக்கும் நிலையில் உள்ளனர். திறமை அடிப்படையில் இந்தப் பணிநீக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு தங்களது பணியை இழப்பவர்கள் நெருக்கடியான சூழலில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நெட்வொர்க் துறையில் வேறு வாய்ப்புகளைப் பெறுவதற்கான சூழல் இல்லை என்று இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon