மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 19 பிப் 2020

தர்பூசணி: வெயிலால் உயர்ந்த விற்பனை!

தர்பூசணி: வெயிலால் உயர்ந்த விற்பனை!

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தர்பூசணி விற்பனை அமோகமாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தற்போது வெயிலின் காரணமாக மோர், கம்மங்கூழ், கேப்பைக்கூழ், சர்பத், குளிர் பானங்கள் மற்றும் வெள்ளரிக்காய், திராட்சை, தர்பூசணி உள்ளிட்டவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது. குறிப்பாகத் தர்பூசணி விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமோகமாக நடைபெற்று வருகிறது. சாலையோரங்களில் பந்தல் அமைத்து தர்பூசணிப் பழங்களைப் பல ஊர்களிலிருந்து லாரிகளில் கொண்டு வந்து குவித்து வைத்து விற்பனை செய்கின்றனர்.

தர்பூசணி கிலோ ஒன்றுக்கு ரூ.25க்கும் ஒரு துண்டு தர்பூசணி ரூ.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது.பொதுவாக சேலத்தில் இருந்து மொத்தமாக தர்பூசணி கொள்முதல் செய்யப்பட்டு திண்டுக்கல்லில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு போதிய விளைச்சல் இல்லாததால் தர்பூசணி வரத்து குறைவாக உள்ளது. இதனால் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon