மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

பட்டு நெசவாளிகள் கடிதம்!

பட்டு நெசவாளிகள்  கடிதம்!

பனாரசிப் பட்டுச் சேலைகளை வங்கதேசம் போலியாகத் தயாரித்து சந்தைக்குள் அனுப்புவதாக பனாரசிப் பட்டு நெசவாளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

வங்கதேசம் தயாரிக்கும் போலி பனாரசிப் பட்டுச் சேலைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஜவுளித் துறை அமைச்சகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்துக்கு பூகோளக் குறியீட்டு நிபுணர் ஒருவர் கடிதம் அனுப்பியுள்ளார். போலியான தயாரிப்புகள் சந்தைக்குள் நுழைவதால் அசலான பொருட்களின் விற்பனை சரிவதாகவும், இதைக் கட்டுப்படுத்த வேண்டுமெனவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து ஒரு நெசவாளர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “பூகோளக் குறியீட்டு உரிமைகள் பெற்ற எங்களது பனாரசிப் பட்டுகள் போலியாகத் தயார் செய்யப்பட்டு விற்கப்படுவதால் தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

பூகோளக் குறியீட்டு நிபுணர் ரஜினிகாந்த் பேசுகையில், “இந்த விவகாரம் குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் பிரதமருக்கும், ஜவுளித் துறை அமைச்சகத்துக்கும், வர்த்தக அமைச்சகத்துக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் எங்களது தயாரிப்புகளுக்கான தேவைக் குறைந்து வருவதற்கான காரணத்தையும், வாரணாசியின் பாரம்பரிய நெசவாளர்களின் தொழில் ஏன் வளர்ச்சியைப் பதிவு செய்வதில்லை என்பதையும் நாங்கள் தற்போது புரிந்து கொண்டோம்” என்று கூறினார். போலி பனாரசிப் பட்டுகள் உற்பத்தி செய்யப்படுவதன் விளைவாக அசல் பனாரசிப் பொருட்களுக்கான தேவையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக நெசவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon