மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

ரயிலில் அடிபட்டு 4 யானைகள் பலி!

ரயிலில் அடிபட்டு  4  யானைகள் பலி!

ஒடிசாவின் ஜார்சூகுடா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 16) நான்கு யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இன்று அதிகாலை 3.30 மணி முதல் 4 மணியளவில் யானைக் கூட்டம் ஒன்று பக்திஹி ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளது. அப்போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஜார்சூகுடா வன அதிகாரி சுசந்த் குமார் கூறியுள்ளார்.

கடந்த மூன்று நான்கு மாதங்களாக அந்தப் பகுதியில் யானைகளின் நடமாட்டம் இல்லை என்ற போதிலும் அப்பகுதியில் ரயில் வேகத்தைக் குறைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

இந்தத் துயர சம்பவம் வனத்துறையினர் தொடர்ந்து யானைகளின் நடமாட்டத்தினை கண்காணிக்காமல் இருந்ததாலேயே நடந்தது என்று வன உயிரினங்களுக்கான சுற்றுச்சூழல் வல்லுநரும் முன்னாள் தேசிய சுற்றுச்சூழல் உறுப்பினருமான பிஸ்வாஜித் மோகந்தி கூறினார்.

வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் இருவரும் இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யானைகளின் உடல்கள் சுமார் நான்கு மணிநேரத்திற்கு ரயில் பாதையில் இருந்து அகற்றப்படாமல் இருந்ததால் அந்த வழியே செல்லும் ஹவுரா-மும்பை ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

2010 முதல் இதுவரை தொடர்ச்சியாக ஒடிசாவில் ரயில்களில் அடிபட்டு 15 யானைகள் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon