மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

கட்சியையே காப்பாத்தல, சாட்சியை காப்பாத்துறாங்களாம் -அப்டேட் குமாரு

கட்சியையே காப்பாத்தல, சாட்சியை காப்பாத்துறாங்களாம் -அப்டேட் குமாரு

அடிக்கிற வெய்யிலுக்கு அம்மியும் கரைஞ்சிருமோன்னு பயத்துல டிராஃபிக்கைக் கடந்து வெய்யில்ல வண்டில வந்துக்கிட்டு இருக்கவனுக்கு ஃபோன் போட்டு, இந்த ப்ரொபசர் பண்ண வேலை தெரியுமான்னு கேட்டார் ஒருத்தர். 2 மினிட்ஸ் இருக்க சொல்லி ஃபோனை கட் பண்ணிட்டு வாட்சப் பாத்தா அசிஸ்டண்ட் ப்ரொபசர் மேடம் அந்தப் பெண்களை தவறான பாதைக்கு கூப்பிடுறதைக் கேட்டேன். திரும்ப அவருக்கு ஃபோன் போட்டு நல்ல விஷயம் தான பாஸ்னு சொல்லி முடிக்கல, பட படன்னு திட்ட ஆரம்பிச்சிட்டார். அட யோவ், இத்தனை வருஷமா வெளில சொல்லாம தற்கொலை பண்ணிக்கிட்ட பொண்ணுங்களுக்கு மத்தியில இந்தப் பெண்கள் மூலமா வெளிய வந்திருக்க இந்த விஷயத்தால இன்னும் பல பெண்களைக் காப்பாத்த வாய்ப்பு கிடைச்சிருக்கேன்னு சொல்ல வந்தேன். திட்றதுக்குன்னே ஃபோன் பண்ணுவீங்களாயா ச்சை. தொக்கா ஒரு சாட்சி சிக்கியிருக்கும்போதே சட்டுனு அரெஸ்ட் பண்ணி அத்தனை பயலையும் புடிச்சிரலாம். ஆனா, நம்ம கவர்ன்மெண்டு தான் வீட்டுக் கதவைக் கூட தாண்ட முடியாம அந்த அசிஸ்டண்ட் ப்ரொபசர் வீட்டு வாசல்ல நாக்ரோ டெஸ்ட் எடுக்க ஊசி போட்டப்ப ஹை டோசேஜ் கொடுத்த பேஷண்டு மாதிரி நிக்குதே. ஆமா, கத்துவா சிறுமி விஷயத்துல கூட நாக்ரோ டெஸ்டுக்கு தான அப்ளை பண்ணிருக்காங்க. இந்த நாட்ல கிரிமினலை புடிக்கிறதைவிட சாட்சியை காப்பாத்துறது தான் பெரிய விஷயமா இருக்கு. சரி, அப்டேட்டைப் படிங்க, ஆபிஸுக்கு வந்தப்ப கவர்னர் இல்லத்துக்கு வெளிய பேரிகார்ட் எல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டு இருந்தாங்க. என்னன்னு பாத்துட்டு வந்துடுறேன். கவர்னர் இல்லத்துக்கு எதிர ஒரு ஜூஸ் கடை போட்ருப்பாங்க. அந்தக்கடை வெச்சிருக்க தாத்தாவை கவர்னர் ஹவுஸ் தாத்தான்னு தான் கூப்டுவோம். எனக்கு ரொம்ப குளோஸ் பிரெண்டு அவுரு.

Sathiya Kumar S

எங்கள் தமிழ்ஐயா பந்தில் ஆறர் அடித்த கெயிலுக்கு கண்டனங்கள்.....

Niruban Chakkaravarthi M

ஓபிஎஸ் விசுவாசிகளுக்கு,

அரசாங்க விழா,அரசு நிகழ்ச்சி போன்றவற்றில் முதல்வர் EPS என்பதாலும் துணைமுதல்வர் OPS என்பதாலும் அனைத்து விளம்பரம்,செய்திதாள்,பேனர்களிலும்

EPS புகைப்படமும்,பெயரும் முதலாவதாகவும் , OPS புகைப்படமும் பெயரும் இரண்டாவதாக இடம் பெற்றிருக்கிறது இதுல ஒரு லாஜிக் இருக்கு.

ஆனால் கட்சியை பொறுத்தவரை OPS தான் தலைமை ஒருங்கிணைப்பாளர். EPS இணை ஒருங்கிணைப்பாளர்தான்.

கட்சி சம்மந்தமான விழாக்களில்,பொதுக்கூட்டங்களின் அழைப்பிதழ்,விளம்பரங்களிலும் EPS பெயர்,போட்டோ முதலில் இடம் பெற்றிருக்கிறது அது எப்படி நியாயம்?கட்சிய பொறுத்தவரை OPS தான் பெரிய பதவி, அவர் போட்டோ,புகைப்படம் தான் முதலில் இடம்பெற வேண்டும்.

கொளுத்தி போடுவோம் ராமர்,லெட்சுமணனை.

Thippu Sulthan K

ஸ்கூலு லீவு உட்டு ஒரு வாரம் ஆவ போவுது இன்னும் வீட்டம்மா ஊருக்கு போவாம இருக்கு..

.அப்பவும் சொல்றேன் இப்பவும் சொல்றேன் மோடி ஆட்சில எதுமே சரியா நடக்க மாட்டங்குது .

Thalapathy Bharani

ஸ்டெர்லைட் நிர்வாகம் எனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தது; நான் ஏற்கவில்லை @ பொன்.ராதா

இதே தான் அந்த டைலரும் சொன்னான்

இரட்டை இலை டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்தார்ன்னு கைது

யாருக்கு வாங்குனதுன்னு இப்ப வரைக்கும் தெரியாது

Rajarajan RJ Cries,

பெண்கள் அரசியல் புரிதலற்றவர்கள்;

திமுக காரன் எல்லாம் ஆபாசமானவன்;

தலித்துகளும் சாதி வெறியர்கள்;

பெரியாரிஸ்டுகள் சூத்திர சாதி வெறியர்கள்;

பார்ப்பன கம்யூனிஸ்டுகள்;

வறட்டு நாத்திக பெரியாரிஸ்ட்,

இந்தியை ஆதரித்தவர் அம்பேத்கர்,

அண்ணா பெரியாரியத்தின் வீழ்ச்சிக்கு காரணமானவர்,

கலைஞர் கருணாநிதியின் துரோகம்,

புத்தம் - அம்பேத்கர் அல்ல, கம்யுனிசமே தீர்வு.

இவிங்க மத்தியில குப்பை கொட்டுறதுக்கு... பேசாம அனைத்திந்திய அண்ணா திராவிட ஆன்மீக அரசியல் மய்யத்தில் சேர்ந்துவிடலாம். அங்க தான் கொள்கையே கிடையாது!

வசந்த் தங்கசாமி

கதவு இருந்தாலும் தேவநாதன் குருக்கள் கருவறையை மூடினானா

யுவராஜ் அநந்தம்

நாட்டுல எவ்வளவு பிரச்சினை

நடந்தாலும் இந்த கவிதை

எழுதுறவங்க தனியா

சோழி உருட்டுறாங்கயா...

Sathish Kumar

காவிரி விவகாரம் பேஸ்புக் ட்விட்டரில் தீர்க்க கூடிய பிரச்சினை இல்லை-எடப்பாடி

சரி அப்படி ஓரமா போ

கருஞ்சட்டை தமிழன்

அதிமுக ஆட்சியில் நடந்தவற்றுக்கு திமுக என்ன செய்தது என்று கேட்கிறீர்கள், ஆனால் ஏன் அதிமுகவை விமர்சிக்கவில்லையென்றால் " அதெல்லாம் ஒரு கட்சியா" என்கிறீர்கள்.

சரி, வேறு எந்த கட்சியையும் விமர்சிக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் ஆட்சியில் இல்லை.

அப்போ எந்த கட்சி சிறப்போ செயல்படுதோ அத ஜெயிக்க வைக்கலாமே? அதுவும் முடியாது, ஏன்னா அவங்களுக்கு வாக்கு வங்கி இல்லை.

சரி அப்போ திமுக சரியில்லை என்பதால் அதற்கு வாக்களிக்ககூடாது, மற்ற கட்சிகளுக்கு, ஆட்சி அமைக்க வாய்ப்பில்லாதவர்களுக்கும் வாக்களிக்ககூடாது, வாக்களித்தாலும் வேலைக்காகாது. அப்போ யாருக்குதான் வாக்களிக்கனும்? ஒரே பதில் அதிமுக.

இந்த வெங்கயாத்திற்கு நேரா அதிமுகவுக்கு வோட்டுபோட சொல்லவேண்டியதுதான.

Vinoth Mannai

இந்த பேராசிரியலர் கதைய கூட விஜய் ஒரு படத்துல செய்து இருப்பாரு மெடிக்கல் சீட்டுக்காக படுக்க கூப்பிடுறது இல்ல சேந்த புள்ளைகள மிரட்டி பெரிய மனுசனுங்களுக்கு விருந்து வைப்பது இப்படி

குமரி மாவட்டத்துல அந்த கிருஷ்தவ மிசின் பள்ளியில உள்ள ஆசிரியர் கம்பியூட்டர் லாபுல புள்ளைகள மார்க் போட மாட்டேன் என்று மிரட்டி பாலியல் கொடுமை நடத்தி போட்டோ எடுத்த விவகாரம் அதுவும் சாட்டை படத்துல வந்துட்டு

மன்னார்குடி செங்கமலத்தாயார் பெண்கள் கல்லூரியில ஒரு பேராசிரியர் தன் ஸ்டூடண்ட ஏமாத்தி கற்பம் அடைய வைத்தார் அண்ணன் திவாகரன் தான் அதன் தாளாளர் விசையம் கேள்வி பட்டு பத்து விரலையும் உள்ள நகங்களை புடிங்கி விட்டுட்டார்

அது வேற விசையம் தஞ்சை மெடிக்கல் காலேஜில பணத்துக்காக அதாவது அநாவசிய செலவுகளுக்காக தானே சோடை போன கதைகள் ஆயிரம் தெரியும் எனக்கு

பதினெட்டு வருசம் முன்னவே அப்படி

என்னமோ சொல்ல வந்தேன் மறந்துட்டு

Arunkumar Dhanaraj

சற்றுமுன் : கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம்; பேராசிரியை வீட்டின் கதவை உடைக்க போலீசார் முடிவு; உறவினரின் வருகைக்காக காத்திருப்பதாக போலீசார் தகவல் . பேராசிரியை வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டுள்ளதால் நிர்மலா தேவி தவறான முடிவுக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது - போலீசார்

-கவர்னர் பேர் வெளிய வரக்கூடாதுன்னு இவனுங்களே ஏதாவது பண்ணிருப்பானுங்களோ

Ganesan Anbu

ஒரு காலத்துல சி.எஸ்.கே வில் விளையாடிய 7 பேர் இந்திய தேசிய அணியிலும் விளையாடினார்கள். சி.எஸ்.கே -வின் 11 பேரும் ஏன் இந்திய அணியில் இல்லைன்னா, மீதி 4 பேர் வெளி நாட்டினர்.

இது சி.எஸ்.கே குறித்த பெருமிதம் அல்ல. அண்ணார் தோனி பண்ண பாலிட்டிக்ஸ்

ஶ்ரீதேவி

லஞ்சம் குடுத்து பேராசிரியர் பணிக்கு வரும் நாய்ங்க குடுத்த பணத்தை பணிஓய்வு பெறும் முன் சம்பாதிக்க மற்றொரு வழி போல....

Thippu Sulthan K

போன ஜென்மத்துல இந்த நூடுல்ஸ் கிண்டுற சட்டி எதோ பாவம் பண்ணிருக்கும் போல..

மாஸ்டர் அடில தீ வச்சிட்டு கரண்டியால அடிக்கிற அடில நமக்கே கண்ணு கலங்குது ..

தே சிம்சன்

பக்கத்து கடை ஓனர் கர்நாடகா காரன். தண்ணி தரலனு அவன் மேல காண்டுல இருக்கேன். அவன் நம்பர கம்முனு நிர்மலா தேவி நம்பர்னு ஸ்டேடஸ் போட்டு விட்டடலாம்னு தோனுது.

இருடா வரேன் தண்ணி தர மாட்டிங்குற நீ

Vadivel Paramasivam

பெண் குழந்தை வேணும்னு ஆசை ஆசையா பெத்துகிட்டவங்க வயித்துல நெருப்பை அள்ளி கொட்டுற மாதிரியான செய்திகளா சமீப காலமா வெளிவருது. ஒரு பெண் பிஞ்சின் தகப்பனாக நிம்மதியிழந்து இருக்கிறேன்.

அந்த பேராசியையை பதவி இடைநீக்கம் செய்து பிரச்சனை அடங்கியவுடன் பதவியளித்து அழகு பார்க்கும் அந்த "பெரிய" இடம். அந்த மாணவிகளின் பட்டப்படிப்பு, எதிர்காலம் எல்லாத்தையும் நெனச்சி பார்த்தா வெறுமைதான் கண்ணுக்கு தெரியுது. இது தெரிஞ்சிருச்சு அதனால நாம பேசுறோம். இத மாதிரி வெளிய தெரியாம எங்க எவ்ளோ என்னன்ன நடக்குதோ??

யாரைதான்டா நம்பறது?

Karthick Papilio Yehoshuah Muhammed

பயபுள்ளய்ங்க காலேஜ்ல படிக்கிற பொன்னுங்கள உயர் அலுவலர்களின் விருப்பத்திற்கு இணங்க கோரி டார்ச்சர் பண்ணிய அந்த பேராசிரியர் நிர்மலாவின் சாதியை கண்டுபிடிச்சிருக்காய்ங்க

ஊரு உலகத்துல எது பண்ணாலும் இந்த சாதிய மட்டும் சீக்கிரம் கண்டுபிடிக்கிறானுகளே

மது மலர்

ஆண்களின் கடைசி ஆயுதம் நம்பிக்கை இருந்தா வாட்ஸ் அப் நம்பர் குடு இல்லனா விடு

Raja Prabhu VK

தமிழகத்துல போராட்டம் உக்கிறமா நடக்கும் போது எப்பவும் சினிமா துறைல இருந்து தான ஆடியோ / வீடியோ வரும்

இந்த வட்டம் கல்லூரில இருந்து வந்திருக்கு அதும் நம்ம கவர்னர் தாத்தா வேற...

என்னமோ போடா மாதவா

Krishna Kittu

அக்டோபர் 2016ல உள்ளாட்சித்தேர்தல் நடத்தலாம்னு சொல்ல, அதை வழக்குப்போட்டு தள்ளி வைக்க சொல்ல, தள்ளியும் வச்சாங்க. இன்னிக்கு தேதி ஏப்ரல் 16, 2018.

சும்மா ஞாபகப்படுத்தினேன்.

-லாக் ஆஃப்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon