மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

விபத்துகளைத் தவிர்க்க ரயில் பாதைகளில் சுவர்!

விபத்துகளைத் தவிர்க்க ரயில் பாதைகளில் சுவர்!

மும்பை – டெல்லி இடையே இடையூறு இல்லாமல் ரயில்களை இயக்கத் தண்டவாளம் அருகே 500 கிமீ நீளம் கொண்ட தடுப்புச் சுவர் அமைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

மும்பை – டெல்லி இடையே பல்வேறு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்தப் பாதையில் மணிக்கு சுமார் 130 கிமீ வேகத்திற்குத்தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்தப் பகுதிகளில் கால்நடைகளின் குறுக்கீடு காரணமாக ரயில்களை அதிகபட்ச வேகத்தில் இயக்க முடியவில்லை. இரண்டு நகரங்களுக்கிடையில் இயங்கும் ராஜ்தானி அதிவிரைவு ரயிலுக்கு, அந்தத் தூரத்தைச் சென்றடைய 16 மணி நேரம் தேவைப்படுகிறது.

எனவே மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் குறுக்கீடுகளைத் தவிர்க்க புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதாவது பாதிப்புகள் ஏற்படக்கூடிய இடங்களை ஆய்வு செய்து அந்தப் பகுதிகளில் சுவர் எழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுவர் எழுப்பிய பிறகு அப்பகுதிகளில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு சரியான நேரத்திற்கு ரயில்கள் இயக்கப்படும் என்றும் விபத்து எண்ணிக்கையும் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுவரின் உயரம் மற்றும் வடிவமைப்பு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் 10 அடி உயரத்தில் சுவர் அமைக்கப்படலாம் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே வாரியத்தின் தலைவர் அஸ்வானி லோகானி இந்தத் திட்டத்தின் அறிவிப்பை உறுதி செய்துள்ளார். சுமார் 1,384 கிமீ பாதையில் நகர்ப்புற பகுதிகளில் சுவர் எழுப்பப்படும் என்று கூறியுள்ளார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon