மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 19 பிப் 2020

என்னைப் பற்றி கவலைப் பட வேண்டாம்!

என்னைப் பற்றி கவலைப் பட வேண்டாம்!

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பற்றி தகவல் ஒன்று வெளியானது. அவரது அலுவலகத்தில் அந்தக் குறிப்பிட்ட அசம்பாவித சம்பவம் நடந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. நடிகர், நடிகைகள் என்றாலே தொடர்ந்து அவர்களைப் பற்றி எளிதாக வதந்திகள் பரவுவது இயல்பு. அதனால் அதில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய விரும்பினோம்.

இதையடுத்து பார்த்திபனைத் தொடர்புகொண்டு அந்தக் குறிப்பிட்ட விஷயத்தைக் கூறி இந்தச் செய்தி உண்மையானதா என்று கேட்டோம். அதற்குப் பதிலளித்த அவர், "உண்மைதான். ஆனால் நாட்டில் நிறைய விஷயங்கள் நடக்கின்றன; பேசுவதற்கு நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. எனக்கு நேர்ந்த சம்பவத்தை பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் மற்ற பிரச்சினைகள் திசைமாறிவிடும். அதனால் அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்" என்று தெரிவித்தார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon