மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 19 பிப் 2020

பாலியல் பலாத்காரம் : என்கவுண்டர் செய்ய வேண்டும்!

பாலியல் பலாத்காரம் : என்கவுண்டர் செய்ய வேண்டும்!

சிறுமிகளிடம் அத்துமீறுபவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டுமென அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு நிதியுதவி, தாலிக்குத் தங்கம் வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “சிறுமிகளிடத்தில் பாலியல் அத்து மீறலில் ஈடுபடுபவர்களுக்கு அரபு நாடுகளில் உள்ளது போன்ற தண்டனைகளை வழங்க வேண்டும். மனிதக் குலமே எற்று கொள்ள முடியாத ஒரு கொடூ ரமான சம்பவங்களில் ஈடுபடுபவர்களை என்கவுண்டர் செய்வது கூட தவறு இல்லை” என்று கூறினார்.

மேலும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் அறிவியல் கணிதப் பிரிவில் மூன்றாம் ஆண்டு பயிலும் 4 மாணவிகளுக்கு அதிகாரிகளின் பாலியல் தேவைகளுக்கு இணங்கும்படி வற்புறுத்திய நிர்மலா தேவி போன்ற கறுப்பு ஆடுகளைக் களையெடுத்து அவர்கள் மீது கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் .

“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவை கைது செய்து விசாரிக்க வேண்டும். அதிகாரி போல் இல்லாமல் அரசியல்வாதியாகத்தான் ராமமோகனராவ் செயல்பட்டார்.

ஸ்டெர்லைட் ஆலை தனக்கு பணம் கொடுக்க முயன்றதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எந்தவித தகவல்களும் இன்றி பொத்தாம்பொதுவாக புகார் கூறியிருக்கிறார். யார் பணம் கொடுக்க முயன்றனர்? எப்போது, எங்கே பணம் கொடுக்க முயன்றனர்? என்பது குறித்தும் கூற வேண்டியது அவரின் கடமை. இதனைப் புரிந்துகொண்டு மத்திய அமைச்சர் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று ஜெயக்குமார் கூறினார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon