மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை!

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை!

ரஷ்யா மீது அமெரிக்கா புதியதாக பொருளதார தடைகள விதித்துள்ளதாக அந்நாட்டின் ஐநா சபை துாதர் நிக்கி ஹலே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வாஷிங்டனில், ஹலே பத்திரிகையாளர்களிடம் பேசியபோது கூறியதாவது

இந்த பொருளாதாரத் தடைகள் அமெரிக்க அரசின் செயலரினால் இன்று அறிவிக்கப்பட உள்ளன. சிரியாவி்ன் தலைநகர் டமாஸ்கஸிலுள்ள ரசாயன ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு கச்சா பொருட்களை சப்ளை செய்யும் ரஷ்ய கம்பெனிகள் மீது விதிக்கப்பட உள்ளன.

சிரியா தனது ரசாயன ஆயுத தயாரிப்புகளை நிறுத்த வேண்டும் என்ற 2013ல் மேற்கொண்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறி வருகிறது. இதற்கு ரஷ்யாவும் உடந்தையாக இருக்கிறது. இப்பொருளாதாரத் தடைகள் நிச்சயம் அவர்களை உணரச் செய்யும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon