மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

வறட்சியால் அழிந்த வரலாறு!

வறட்சியால் அழிந்த வரலாறு!

சுமார் 4350 ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையான வறட்சியாலேயே சிந்து சமவெளி நாகரீகம் அழிந்ததாக கோரக்பூர் ஐஐடி மாணவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகின் மிகப்பழமையான நாகரீகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரீகம் 4500 ஆண்டுகள் பழமையானது.

5000 ஆண்டுகளுக்கு முன்னதான மழைப் பொழிவு நிலவரம் குறித்து நிலவியல் மற்றும் புவி இயற்பியல் மாணவர்கள் சமீபத்தில் ஆய்வுமேற்கொண்டனர். அப்போது 4350 ஆண்டுகளுக்கு முன்னர், கிட்டத்தட்ட 900 ஆண்டுகளாக ஆறுகள் அனைத்தும் வறண்டு, மழையின்றி சிந்துசமவெளி நாகரீகம் அழிந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து ஆராய்ச்சியாளரும் மூத்த ஆசிரியருமான அனில் குமார் குப்தா, "கி.மு. 2530ஆம் ஆண்டு முதல் கிமு 1450ஆம் ஆண்டு (4350 ஆண்டுகளுக்கு முன்னர்) வரை சிந்துசமவெளியில் மழையின்றி வறட்சியான சூழல் உருவானது. இதனால் மக்கள் தங்கள் குடியிருப்புகளைத் விடுத்து பசுமையான இடத்தை நோக்கிச் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

பல ஆண்டுகளாக நிலவிய இந்த வறட்சியால் மக்கள் கூட்டம் சிந்து நதிக்கரை பகுதியை விட்டு மழைப்பொழிவு சிறப்பாக இருந்த கங்கை நதிக்கரை பகுதிகளான உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon