மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

தொழில்நுட்பத்தில் நான்காவது தொழிற்துறைப் புரட்சி!

தொழில்நுட்பத்தில் நான்காவது தொழிற்துறைப் புரட்சி!

உலகின் நான்காவது தொழிற்துறைப் புரட்சியில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்குமென்று உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் (டபுள்யூ.இ.எஃப்) போர்கே பிரெண்டே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவில் இளைய தலைமுறையினர் எண்ணிக்கை மிக அதிகமாகவுள்ளது. இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் 27 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். தொழிற்துறையில் இவர்களின் பங்களிப்பும் முக்கியமானதாகவுள்ளது. இதனால் உலகின் நான்காவது தொழிற்துறைப் புரட்சியில் இந்தியாவின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாக இருக்கும். இந்தியாவில் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களின் எண்ணிக்கையும், இணையதளம் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

அதேநேரத்தில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் மின்சார வசதியை மேம்படுத்துதல், நாணய நிலைத்தன்மை மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்தலும் அவசியமாகவுள்ளது. நான்காவது தொழிற்துறைப் புரட்சி என்பது தொழில்நுட்பம் சார்ந்தது. செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் போன்றவை தொழில்நுட்பத் துறை புரட்சியில் முக்கியப் பங்காற்றும்” என்றார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon