மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

அமைச்சர்கள் மீது அவதூறு: கோர்ட்டில் தினகரன்

அமைச்சர்கள் மீது  அவதூறு: கோர்ட்டில் தினகரன்

தமிழக அமைச்சர்கள் குறித்து அவதூறான முறையில் பேட்டி அளித்ததாக முதல்வர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், டிடிவி தினகரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக அமைச்சர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தாக கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்தி கடந்த 28.02.2018 அன்று தினமலர், டெக்கான் கிரானிக்கல் ஆகிய நாளிதழ்களில் வெளியானது.

இதையடுத்து, தினகரனின் இந்தப் பேச்சு தவறானது, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் அவதூறான கருத்தை அவர் தெரிவித்துள்ளார். எனவே அவர் மீது அவதூறு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

முதல்வராக எடப்பாடி பழனிசாமி அரசு பதவி ஏற்ற பிறகு அரசு தொடர்ந்த முதல் அவதூறு வழக்கு இதுவாகும்.

இந்த வழக்கு நீதிபதி சுபாதேவி முன்பு இன்று(ஏப்ரல் 16) விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தினகரனும் நேரில் ஆஜராகியிருந்தார். இந்நிலையில், வழக்கு விசாரணையை வரும் ஜுன் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon